புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2023

இத்தாலியில் அகதிகள் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி

www.pungudutivuswiss.com
லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன்
 செல்லப்பட்ட அகதிகள் கப்பல் மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா, 
இத்தாலி அருகே லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன் செல்லப்பட்ட புலம்பெயர்ந்தோர் கப்பல் மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக இந்த விபத்தில் இருந்து தப்பிய நான்கு பேர் கொண்ட குழு தகவல் தெரிவித்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் போது இந்த ஆண்டு 1,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர் என்று அமெரிக்க அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

ad

ad