புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2023

பறாளய் முருகன் அரச மரத்தின் வயதைக் கண்டறிய ஜனாதிபதி உத்தரவு!

www.pungudutivuswiss.com


சுழிபுரம் பறாளய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

சுழிபுரம் பறாளய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்

அத்துடன் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என்று தொல்லியல் திணைக்களத்திடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வை சந்தித்து பறாளை முருகன் கோவில் விடயமாக பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் இப்படி ஒரு பிரச்சனை நீடிப்பது தனது கவனத்திற்கு யாராலும் கொண்டுவரப்படவில்லை என்று ஜனாதிபதி குறித்த சந்திப்பில் குறிப்பிட்டார்.

பறாளய் முருகன் கோவிலில் வரலாறு சுமார் 300 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டு சம்பவத்தின் பின்னணியையும் வரலாற்று சுருக்கத்தையும் த.சித்தார்த்தன் எம்.பி விளக்கினார்.

இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால் சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார் பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

பறாளய் முருகன் கோவிலின் தல விருட்சமான அரசமரம் சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பது தனது அபிப்பிராயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டியிருந்த அரச மரங்களை எல்லாம் அழித்து விட்டதாகவும் மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார்.

அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா வர்த்தமானி வெளியிடப்பட்டது எனவும் அப்படியான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் அது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவுக்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது எனவும் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பினர்.

இதன் மூலம் அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய சட்டபூர்வமற்ற வர்த்தமானி என்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி தொல்லியல் திணைக்களம் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானி வெளியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனது செயலாளர் சமன் எக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக வர்த்தமானியை மீளப் பெறுவது தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் பரிசோதனை நடத்தி வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக சந்திப்பில் கலந்து கொண்ட த.சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.

ad

ad