புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2023

ஆசிய கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட போட்டியின் முதற்

www.pungudutivuswiss.com

போர்த்துக்கல்லில் இடம்பெற்று வருகின்ற ஆசிய கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மூன்றிற்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி வெற்றிப் பெற்றுள்ளது.

தென்சீனாவின் எச்மொங் அணியுடன் இடம்பெற்ற இச்சுற்றில் நிரஞ்சன் தலா இரண்டு கோல்களையும், அச்சுதன் ஒரு கோலையும் அடித்த நிலையில் தமிழீழ அணி வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளது.

அடுத்த வருடம் குர்திஸ்தானில் நடைபெற இருக்கின்ற கொனிபா உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிக்கான தகுதிகாண் போட்டியாக இந்த ஆசிய கிண்ண போட்டி இடம்பெறவுள்ளது.

தமிழீழ அணிக்கான வீரர்கள்


பிரான்ஸ், கனடா, சுவிஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளின் தமிழீழ அணிக்கான வீரர்கள் போர்த்துக்கல்லில் அணிதிரண்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு குர்திஸ்தானில் நடைபெற இருக்கின்ற கொனிபா உலகிக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் உலகின் பல பாகங்களில் இருந்து 16இற்கு மேற்பட்ட அணிகள் பங்கெடுக்க இருக்கின்ற நிலையில் தமிழீழ அணி தன்னை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி வருகிறது.

எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி சுற்று போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் முதல் சுற்றில் வெற்றியீட்டியுள்ள தமிழீழ அணி தன்னை இறுதி சுற்று நோக்கி தயாராக்கி வருகிறது. 

ad

ad