புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2023

கம்பி எண்ணும் 48 பௌத்த பிக்குகள்! - பெரும்பாலானோர் மீது பாலியல் குற்றச்சாட்டு.

www.pungudutivuswiss.com


சிறுவர் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது சுயாதீன எதிரணி எம்.பி.டலஸ் அழகபெருமவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஜூன் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச் சாட்டுக்களின் கீழ் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களில் 29 பௌத்த பிக்குகள் கைதிகள் என்ற அடிப்படையிலும், 19 பௌத்த பிக்குகள் சந்தேகத்தின் அடிப்படையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 20 பௌத்த பிக்குகளும், பெண் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் 3 பௌத்த பிக்குகளும் சிறையில் உள்ளார்கள். அத்துடன் மனித படுகொலை குற்றச்சாட்டில் 2 பௌத்த தேரர்களும். நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 தேரர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 3 பௌத்த பிக்குகள் சிறையில் உள்ளனர்” என்றார்.

ad

ad