![]() தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். |