புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2023

பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள
நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணா
வை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகியது. Also Read - டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல் இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. Also Read - அதிமுக-பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும்: அண்ணாமலை பேட்டி இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, "அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாக்கப்படும். ஓராண்டாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பாஜக விமர்சித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பற்றியும் அவதூறாக பாஜக மாநில தலைமை விமர்சித்து வருகிறது. அதிமுக பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் பாஜக மாநில தலைமை பேசியுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கு விருப்பத்திற்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறிக்கிறோம்." என்றார்.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad