புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2023

இணையத்தில் பரவிய 20 சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள்: ஸ்தம்பித்த ஸ்பெயின்!

www.pungudutivuswiss.com

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்

இந்த சம்பவத்திற்கும் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கும் தொடர்பில்லை என்றே கூறப்படுகிறது. 11 வயது முதல் 17 வயதுடைய இளம் பெண்களில் இந்த அதிர்ச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் Almendralejo பகுதியை சேர்ந்தவர்கள் என்றே தெரியவந்துள்ளது. 14 வயதான சிறுமி ஒருவர், பாடசாலையில் இருந்து வீடு திரும்பியதும், தமது நிர்வாண படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தாயாரிடம் கவலை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எப்போதேனும் அப்படியான புகைப்படங்களை பதிவு செய்தாயா என அந்த தாயார் மகளிடம் விசாரிக்க, அந்த சிறுமி மறுத்துள்ளார். இந்த நிலையில் அந்த தாயார் விசாரித்ததில், அந்த நகரத்தில் 28 சிறுமிகள் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து பொலிசாரை நாடிய தாய்மார்கள், இந்த விவகாரத்தில் இதுவரை 11 உள்ளூர் சிறுவர்கள் ஈடுபட்டதை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மட்டுமின்றி, இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தமது புகைப்படத்தை ஆடை இன்றி மாற்றியது இணையத்தில் கசியவே, அதன் பின்னரே பல பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.

பொலிசார் தற்போது அந்த சிறுமி யார் என்பதையும் விசாரித்து வருகின்றனர். சுமார் 30,000 மக்கள் தொகை கொண்ட Almendralejo நகரமானது ஆலிவ் மற்றும் சிவப்பு ஒயின் உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும்.

ஆனால் தற்போது தேசிய அளவில் நிர்வாண புகைப்படங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய சிறுவர்களின் வயது 12 முதல் 14 என்றே கூறுகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் மட்டுமே ஸ்பெயின் நாட்டில் குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்க முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad