புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2023

அமைச்சரவை மாற்றம் - ஜனாதிபதியின் தவறான முடிவு!

www.pungudutivuswiss.com
அமைச்சரவை மாற்றம் விடயத்தில் ஜனாதிபதி தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் விடயத்தில் ஜனாதிபதி தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

முக்கியமாக சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹெலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

” கெஹெலியவிற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பது சரியானதா என்பது குறித்து ஜனாதிபதி சிந்தித்திருக்க வேண்டும். புதிய சுகாதார அமைச்சராக ரமேஸ் பத்திரனவை நியமிக்கும் தீர்மானம் தொடர்பில் எமது கட்சியின் அதிருப்தியை ஏற்கனவே ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளோம்.” என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சர் பதவிகளை வழங்கியமை குறித்தும் சாகர அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

”இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி பொதுஜனபெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களிற்கு அதனை வழங்குவது தவறான முடிவு. நாங்கள் இதனை கடுமையான எதிர்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad