புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2023

காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்!

www.pungudutivuswiss.com

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப் படைகள் தோராயமாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தையைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் உதவிப் பணியாளர்கள் குழு காஸாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன

மட்டுமின்றி, இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 600 சிறார்கள் மாயமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கு அசைக்க முடியாத ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாலஸ்தீன மக்களின் அழுகுரலை உலக நாடுகள் புறக்கணிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்னர் ராஃபா எல்லை திறந்துவிடப்பட்டுள்ளது. அத்துடன் காஸா மக்களுக்கான 20 லொறி நிவாரணப் பொருட்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காஸா பகுதி மக்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், இந்த 20 லொறி நிவாரணம் என்பது கடலில் விழுந்த துளிக்கு சமம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒரு துளி, வரும் நாட்களில் பாயும் உதவி நதியாக மாறும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அக்டோபர் 7 முதல் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறைந்தது 1,782 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மட்டும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு 41 பாலஸ்தீனியர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.

ad

ad