புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2023

காங்கேசன் - நாகை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை - ஜனவரி முதல் வாரம் ஆரம்பம்

www.pungudutivuswiss.com


காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

.

    

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் இதுதொடர்பில் தெரிவிக்கையில்,

ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் பயணிக்கலாம்.

ஒருவழிப் பயணக்கட்டணமாக 4,250 இந்திய ரூபாவும் மற்றும் வரிகளும் அறவிடப்படும். அத்தோடு ஒருவழிப் பயணக்கட்டணமாக 17,000 இலங்கை ரூபா மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முற்பதிவுகளை தொலைபேசி செயலி மற்றும் இணைய வழிகளில் மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ad

ad