புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2023

குஷ்பு யாழ்ப்பாணம் வரமாட்டாராம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வர இருந்த நிலையில், அவரது வருகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புக்கள் காரணமாகவே தென்னிந்திய நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்புவின் கருத்துக்கு வடக்கு கிழக்கு தமிழ் தாயகப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகைதர இருந்த நிலையில் எதிர்ப்புக்கள் காரணமாக அவரது வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்புவிற்கு பதிலாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad