அங்கு கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், “நாட்டைக் காப்பாற்றிய தலைவனுக்குக் கடமையாகத்தான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன். இன்று இந்த நிகழ்வுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன். சில முகங்களையே இங்கே காணக்கிடைக்கிறது. நாம் யாரும் தோற்கவில்லை. நீங்களும் தோற்றுப்போகவில்லை. நாமல் ராஜபக்ஷ இங்கு வந்துள்ளார். ஒரு மூலையில் இருக்கிறார். அப்படி இருக்க முடியாது. முன்னாள் வந்து தந்தை சென்ற பாதையில் முன்செல்ல வேண்டும். ராஜபக்ஷமாரை யாராலும் அழிக்க முடியாது. என குறிப்பிட்டார். |