புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2024

நீதிமன்றத்திற்கே சவால் விடுகிறார் ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்.

ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் பந்து வீசுகின்றார். இதில் முதலாவது பந்து வீச்சாக பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் கருத்து உள்ளது. சூட்சும ஞானம் இருப்பதால் இதற்கு தந்திரம் என்று கூறலாம்.

அடுத்ததாக கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சை விடயத்தை இரண்டாவது பந்தாக வீசினார்.

அத்துடன் வாடகை வீடுகள் வரி தொடர்பான விடயத்தை மூன்றாவது பந்தாக வீசினார். இதில் முதலாவது பந்தான நீதிமன்றத்திற்கு சவால் விடுவது உள்ளது. தந்திரமாகவே மற்றைய பந்துகளை வீசியுள்ளார்.

இதேவேளை பெண்கள் வலுப்படுத்தல் தொடர்பான விடயத்தில் பாலின மாற்றத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டங்கள் வருவது சிக்கலுக்குரியது. உயிரியல் ரீதியிலான பெண்களை பலப்படுத்துவது சரியானது. ஆனால் அந்தப் போர்வையில் பாலின மாற்ற வியாபாரத்திற்கு இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றத் தீர்மானத்திற்கு சவால் விடுவது தவறானதே.

அத்துடன் வரிக்கு மேல் வரி அறவிடுவது தவறுதான். என்றாலும் நீதிமன்றத்திற்கு சவால் விடுவது மிகவும் பாரதூரமானதே. அப்படியென்றால் உயர்நீதிமன்றத்தை மூடிவிடுங்கள். அவ்வாறான உயர்நீதிமன்றத்தை வைத்திருப்பதில் பலனில்லை என்றார்

ad

ad