அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அவர் நாளை மாலை 5 மணியளவில் சந்திக்கவுள்ளார். இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. |