புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2024

அரசுக்கு ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பன்முகப்படுத்தப்பட்ட நிதி தொடர்பில் சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட கூற்றை தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே லக்‌ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

முதலில் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர கூறுகையில், பன்முகப்படுத்தப்பட்ட நிதி கடந்த காலங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படாது இருக்கின்றது. இது தொடர்பில் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் இப்போது பட்டியலொன்று வந்துள்ளது. அதில் சில எம்.பிக்களுக்கு 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பைசல் காசீம், ஹாரீஸ், இசாத் ரஹுமான் மற்றும் அலி சஹீர் மௌலானா அகியோருக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரிஷாட் பதியூதினுக்கு 84 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி கவனிப்பு வழங்கப்படுகின்றன என தெரியவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் ஏன் வழங்கப்படுகின்றது?

இதனை வழங்குவதென்றால் எல்லோருக்கும் வழங்க வேண்டும். நாங்களும் வாக்குகளிலேயே வந்துள்ளோம். நாங்களும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அரசாங்கத்திற்காக கடைக்கு போனால்தான் இதனை வழங்குவீர்களா? இதனை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறுகின்றேன் என்றார்.

ad

ad