இவ்வாறு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த நாடாளுமனற உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள கட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த உறுப்பினர்களுக்கு தனி தனியாக அழைத்து அவர்களை மீண்டும் இணைத்து அவர்களின் ஆதரவைப் பெறும் வேட்பாளரை நியமிக்க தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது உறுப்பினர்கள் குழுவொன்று கட்சி சார்பில் முன்னிலையாகவுள்ள வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (01) பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைக் காரியாலத்தில் அழைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை அதிகாரிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில தினங்களுக்குள் அவ்வாறு கட்சி மாறியவர்களின் மற்றுமொரு குழு, கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணைவதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரணிலுக்கு ஆதரவு வழங்காது கட்சியின் சின்னத்தில் வேறொரு வேட்பாளரை முன்நிறத்துவதாக கட்சியின் அரசியல் சபை தீர்மானித்ததன் பின்னர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க 92 அமைச்சர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தாலும் அதில் கலந்து கொண்டிருப்பது 72 பேர் மாத்திரமே எனவும் அவர்களுள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சர்கள் 48 பேர் கலந்துக்கொண்டிருப்பதாகவும் பெரும்பாலானோர்கள் அதில் கலந்துகொண்டிருப்பது அரசாங்கத் தரப்பின் கூட்டம் என நினைத்தே தவிர ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்காக அல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை (07) அதிகாரபூர்வமாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவாக இருக்கலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. |