புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2024

பாய்ச்சலுக்கு தயாராகிறாரா பசில்?

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பொதுஜன பெரமுன அந்த தீர்மானத்தை எடுத்த பின்னர், இதுவரை ராஜபக்ச குடும்பத்தை பேசத் தயங்கிய அக்கட்சியின் உறுப்பினர்கள் கூட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலைமையை பசில் ராஜபக்ஷ தீவிரமாக அவதானித்து வருவதாக ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து மோசடி மற்றும் ஊழல் கோப்புகளும் பசில் ராஜபக்சவிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad