புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2024

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க 5 புலம்பெயர் அமைப்புகள் ஆதரவு!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்வதுடன் சர்வதேசமயப்படுத்தமுடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்வதுடன் சர்வதேசமயப்படுத்தமுடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன

ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.

அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறி;த்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இலங்கைத் தமிழ்ச்சங்கம், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

ஈழத்தமிழ் மக்கள் சார்பாக பலதரப்பட்ட சமூக அமைப்புக்களும், அவற்றுடன் பல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை நாம் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கின்றோம்.

இவ்வாறு களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்யவும், சர்வதேசமயப்படுத்தவும் முடியும் என நம்புகின்றோம்.

சிங்கள தேசத்தினால் எம்மக்கள் மீது கடந்த 76 வருடகாலமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுவரும் அட்டூழியங்களையும், அநீதிகளையும், இனப்படுகொலைகளையும், ஏமாற்று வழிமுறைகளையும் நாம் எமது அனுபவமாகக்கொண்டு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் ஈழத்தமிழர்கள் ளசுயநிர்ணய உரிமைக்கும், பூரண சுதந்திரத்துக்கும் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எமது சுதந்திரத்துக்கான அரசியல் தீர்வை ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேச சமூகத்தினால் நடாத்தி, கண்காணிக்கப்படுகின்ற பொதுவாக்கெடுப்பின் ஊடாகவே பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற திடமாக நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றோம்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 1230 என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமானது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்கு சுதந்திரத்துக்கான பொதுவாக்கெடுப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. இது ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாட்டின் திருப்புமுனையின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது.

பொதுவாக்கெடுப்புக்கான முழு உரிமை எமது மக்களுக்கு உண்டு. அவ்வாறானதொரு பொதுவாக்கெடுப்பின் மூலமாகவே எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கமுடியும். அந்த உரிமையை சர்வதேச ஆதரவுடன் நடைமுறைப்படுத்த நாம் ஆவன செய்தல் வேண்டும். அதனை முன்னிறுத்தி நடவடிக்கைகளுக்கு எமது முழுமையான ஆதரவையும், பங்களிப்பையும் நிச்சயமாக வழங்குவோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad