-

17 அக்., 2025

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை

www.pungudutivuswiss.com
இலங்கையில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் மறைந்து வாழும் 25 குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக இன்டர்போல் (சர்வதேச காவல்துறை அமைப்பு) இலங்கை காவல்துறைக்கு உதவி வழங்க உள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதையடுத்து, துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தங்கியிருந்த இலங்கை குற்றவாளிகள் தங்கள் மறைவிடங்களை மாற்றத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவர்கள் அந்த நாடுகளில் இருந்து வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில் இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை காவல்துறைக்கு மிகவும் அவசியமான 25 முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மூலங்கள் தெரிவித்துள்ளன.

ad

ad