-

20 நவ., 2025

3 உள்ளூராட்சி சபைகளின் என்பிபியின் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிப்பு! [Thursday 2025-11-20 16:00]

www.pungudutivuswiss.com

களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20)  தோற்கடிக்கப்பட்டது.
சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர்  அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது. சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி ( NPP ) யின் தவிசாளர் அருண பிரசாத் வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்

அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சஞ்சீவ லலீந்திர வாக்கெடுப்பைக் கோரினார், அதை பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் நிலந்த சந்திரலால் வழிமொழிந்தார்.

பின்னர், செயலாளர் எரங்க தேவபுர வாக்கெடுப்பை நடத்தினார், அதில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், சபையில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டில் உள்ள தங்காலை மாநகர சபையின் முதல் பட்ஜெட்டும் தோல்வியடைந்துள்ளது. வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும்,எதிராக பத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

சர்வ ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து, அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதை அடுத்து தோல்வி உறுதிசெய்யப்பட்டது.

இதற்கிடையில்,இதற்கு நேர்மாறாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வெலிகம பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டை நிறைவேற்றியது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தன.

யட்டியந்தோட்ட பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நான்கு வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டது.

தவிசாளர் மற்றும் சுயேச்சை உறுப்பினர் சூரிய குமார் சுமித்ரன் உட்பட 12 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பட்ஜெட் முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்,

அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன எக்சத் பெரமுன மற்றும் சர்வ ஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

வரவு- செலவுத் திட்ட முன்மொழிவை தவிசாளர் (தேசிய மக்கள் சக்தி), வழக்கறிஞர் தரிந்து தேவகுருவால் பொதுச் சபைக்குக் கொண்டு வந்தார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் லசித தியகல மற்றும் சர்வ ஜன பலய கட்சியின் லால் நிஷாந்த, சர்வ ஜன பலய கட்சியின் உறுப்பினர்கள் சாந்த மல்லவா ஆகியோர் வரவு- செலவுத் திட்டத்திற்கு வாக்கெடுப்பு தேவை என்று கூறினர்.

அதன்படி, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 2026 வரவு- செலவுத் திட்ட வரைவுக்கு ஆதரவாக பதின்மூன்று வாக்குகளும் எதிராக பதினேழு வாக்குகளும் பெறப்பட்டன.

ad

ad