சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் வகையில் உள்துறைச் செயலர் திட்டம் வகுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம்
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் முன்வைத்துள்ள திட்டத்தின்படி, புலம்பெயர்தல் நிலை ரத்து செய்யப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளும்கூட இனி நாடுகடத்தப்படலாம்.
AFP
அகதி நிலை முடிவடைந்த பின்பும், பிரித்தானியாவில் குழந்தை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பிரித்தானியாவில் குழந்தை பிறந்ததைக் காரணம் காட்டி, பிரித்தானியாவிலேயே தங்கியிருக்க முயல்வோரை தடுப்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார் ஷபானா.
ஆக, தம்பதியர் பிள்ளை பெற்றுக்கொள்ளத் திட்டமிடுவதிலும் மூக்கை நுழைக்கும் வகையில் அமைந்துள்ளது ஷபானாவின் திட்டம்!
Getty
பிரித்தானியாவில் பிறக்கும் ஒரு குழந்தை தானாகவே பிரித்தானியக் குடிமகன் ஆகிவிடுவதில்லை, தங்கள் வாழ்வின் முதல் பத்து ஆண்டுகளை அந்தப் பிள்ளை பிரித்தானியாவில் செலவிட்டால், அந்தப் பிள்ளை குடியுரிமை பெற தகுதி பெறலாம்.
ஆக, பிள்ளைகளைக் காரணம் காட்டி பிரித்தானியாவின் புகலிட அமைப்பை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.