உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் ஏர்பஸ் A380-800 விமானம் (A6-EVQ) கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு பறந்து கொண்டிருந்த விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிக்கு அவசர மருத்துவக் கோளாறு ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எயார்பஸ் விமானம்
எயார்பஸ் A380 விமானம் தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக கருதப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு விமானம் தரையிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியாக எமிரேட்ஸ் எயார்பஸ் A380 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

