இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று பிக்கப் டிரக் மீது மோதியது. பேருந்து பின்னர் சாலையை விட்டு விலகி 200 அடி ஆழமுள்ள ஒகோனா ஆற்றின் கரையில் கவிழந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே 37 பேர் இறந்ததாகவும், காயமடைந்த ஒருவர் சிகிற்சைகள் பலனின்றி இறந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்தில் சுமார் 60 பேர் இருந்தனர்.
பெருவின் காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அரேக்விபாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளில் பேருந்து தலைகீழாகக் கிடந்ததுடன், பயணிகளின் உடைமைகள் சிதறிக் கிடந்தன.
பிக்கப் டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
காயமடைந்த 26 போில் இரண்டு எட்டு மாதக் குழந்தையும் அடங்குவர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும், மக்களை மீட்பது, காயமடைந்தவர்களை வெளியேற்றுவது மற்றும் உடல்களை மீட்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் பெருவின் உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
லாரி ஓட்டுநரின் பொறுப்பை தீர்மானிக்க விசாரணை நடைபெறும் என்று உள்ளூர் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. விபத்தில் இருந்து உயிர் பிழைத்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். விபத்தில் பலியானவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.
