-

13 நவ., 2025

யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

www.pungudutivuswiss.com




யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் 

வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். 

சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் 

ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். 

பின்னர் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

அதேவேளை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் , நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் , அவற்றில் நீராடுதலை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


ad

ad