
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைத்துள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தை வந்தடைத்துள்ளர்
குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி தொடர்ந்து 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது