-

21 ஜன., 2026

நிலக்கரி கொள்வனவில் மோசடி- முழு அமைச்சரவையும் சிறைச் செல்ல நேரிடும்! [Wednesday 2026-01-21 06:00]

www.pungudutivuswiss.com

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும்  என்று  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார்.

    

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழலை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. அமைச்சர்கள் தவறுகளை தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏதேனும் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியவுடன் இரகசியமாக குறைகளை திருத்திற் கொள்கிறார்கள். பின்னர் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கிறார்கள்.

நிலக்கரி கொள்வனவில் பாரியதொரு மோசடி இடம்பெற்றுள்ளது. புதிய நிறுவனத்துக்கு விலைமனுகோரல் வழங்கப்பட்டுள்ளது.தரமற்ற நிலக்கரியால் பாரிய விளைவுகள் ஏற்படும். இந்த விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் .

அவசர தேவைக்கான முறையான காரணிகள் ஏதும் இல்லாத வகையில் தரமற்ற வகையில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும்.

எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டிக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படுவதை அரசாங்கம் பிரதான செயற்பாடாக கொண்டுள்ளது. நான் முன்வைத்த பகிரங்க சவாலை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்துக்கு வெளியில் எவரும் இவ்விடயம் தொடர்பில் விவாதத்துக்கு வரலாம் என்றார்.

ad

ad