புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2013

வெலிவேரியவிற்கு செல்லுமாறு நானே படையினரிடம் கோரிக்கை விடுத்தேன்: ஞானசார தேரர்
தமது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்!- ஆங்கில இணையம்
இலங்கையின் உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஆங்கில செய்தி இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு வேட்பாளர்கள் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் ஹத்துருசிங்க
விசாரணை என்ற பெயரில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்! என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு வெறும் அப்பட்டமான பொய்ப்பிரசாரமாகும்.
தற்கொலைக்கு முன் இளவரசன் என்னிடம் பேசினார்: திவ்யா திடீர் வாக்குமூலம்

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளவரசன் என்னிடம் போனில் பேசினார் என திவ்யா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

4 ஆக., 2013

தயா மாஸ்டர் நீக்கப்பட்டது ஏன்?
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான, வேட்பாளர் பட்டியல்கள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்னதாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலேயே ஈ.பி.டி.பி. போட்டியிடப் போவதாக
பழ.நெடுமாறன் தலைமையில் சீமான் திருமணம்:
மாஜி அமைச்சர் காளிமுத்து மகள் கயல்விழி மணமகள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் மணக்கிறார். திருமணம் சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 

பிரபாகரன் மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ். :
துறையூர் என்ஜினீயர் கைது
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது
நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு ஆஜர் படுத்தப்பட்டார்.
நம்மவர்கள் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட கென் கிருபா ஸ்காபுறோ கில்ட்வூட்டில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி நீண்ட காலமாகவே லிபரல் கட்சியின் பிடியில் இருந்த தொகுதி என்பது முதல் காரணம். இரண்டாவது படகுகளில் வந்த அகதி மக்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்பிய விவகாரங்களிலும் வேறு சில சர்ச்சைகளினாலும் கோன்செர்வேற்றிவ் கட்சி தமிழர்களுக்கு எதிரானது என்ற எண்ணமே மக்கள் மனங்களில் வேரூன்றியுள்ளது.

ஸ்காபுறோ கில்ட்வூட்டில் கென் கிருபா வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது ஏன் !! (காணொளி )

மூன்றாவதாக நம் மக்களில் பலருக்கு தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லாமையும் தான். வேடிக்கையாக சொல்ல வேண்டுமானால் நம்மவர்கள் பலர் எந்த தொகுதியில் வசிக்கிறோம் என்பது கூட தெரியாத நிலையிலேயே இன்னமும் உள்ளனர். மற்றும் கனடிய தமிழ் பொது அமைப்புக்களினதும் தமிழ் ஊடகங்களினதும் போதியளவு ஆதரவு போதாமையும் பிரதான காரணங்களாகும்

இருப்பினும் இந்த முறை ஸ்காபுறோ தேர்தலின் போது பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தது காணக் கூடியதாய் இருந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும், அதற்கு உறுதுணையாய் இருந்து தேர்தல் பணியாற்றியோருக்கும் கென் கிருபா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ken_kirupa_result

காதலனை கொல்ல நினைக்கிறார்: இயக்குனர் சேரன் மீது மகள் பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)

தன்னை தன் காதலனிடமிருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் இயக்குனர் சேரன் மீது அவரது மகள் பரபரப்பை புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மடதுவேளிசனசமூக நிலையத்தில் நடைபெறும் கணணி வகுப்பு
சனசமூக நிலைய வழிகாட்டி திரு அ .சண்முகநாதன் அவர்கள் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ளார் அவரது முயற்சியால் உருவாக்கப் பட்டு  அவரே கற்பித்தும்  வருகிறார் 

விபசார விடுதி சுற்றிவளைப்பு முகாமையாளருடன் யுவதி கைது

மகாவலி ஆற்றின் கரையோரமாக ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட

கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம்: விமல்



கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம்.

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது

வெலிவேரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும்: பொன்சேகா

வெலிவேரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு அரசு மற்றும் இராணுவம் ஆகியன பொறுப்புக்கூற வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.





       ""ஹலோ தலைவரே...…பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்ட வாதத்திற்கு வந்தி ருப்பதைப் பார்த்து வக்கீல்களே ஆச்சரியப்படுறாங்க.''

""17 வருட வழக்காச்சே.. இறுதிக்கட்டம் நோக்கி வருதுன்னா ஆச்சரியத்தோடு பரபரப்பு, பதட்டம், எதிர்பார்ப்பு எல்லாமும் இருக்குமே.''…



         "சூடான ஒரு மேட்டர் சொல்லவா?' என நம் லைனுக்கு வந்தார் நமது நியூஸ் சோர்ஸ்.

சொல்லுங்களேன்.

"தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் குயிலே...'
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 4 ஒரு
யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 9 சுயேட்சைக் குழுக்கள் யாழ். மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
வடமாகாண தேர்தலில் யாழில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர் அடித்துக் கொலை!- சுயேட்சைக் குழுக்களுக்கு சின்னங்கள் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில்

ad

ad