-
10 செப்., 2013
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரனன் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள்
இனப்படுகொலை நடந்த இலங்கையில் கொமன்வெல்த் மாநாடா?: திருச்சியில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் சைக்கிள் பேரணி
“இனப்படுகொலை இலங்கையே”, “இலட்சம் தமிழரின் பிணக்குவியல் மீது கொமன்வெல்தா” என்ற முழக்கத்துடன் கொன்று குவிக்கப்பட்ட ஈழ உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் சகோதரிகளிற்கும் நீதிகேட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.
திரு இரத்தினசிங்கம் செந்தில்குமரன் |
பிறப்பு : 13 பெப்ரவரி 1978 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2013 |
|
இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. வீடியோ
இன்று தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும்எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும் , சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சமூகத்துடன் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிகந்தை, பூந்தோட்டம் ஆகிய தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள், அனைத்துலகம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராத நிலையில்; ஐ.நா முன்னிலையிலேயே 05.09.2013 அன்று தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளார் .
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள் தமிழீழ மண்ணில் தமிழினம் விடுதலைபெற்று வாழவேண்டுமென்ற அரசியல் தெளிவோடு உறுதியான இலட்சியத்துடனவாழ்ந்தவர். அத்துடன் விடுதலையை விரைவில் வென்றெடுக்கவென புலம்பெயர் தேச கவனயீர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பக உயர் ஆணையாளர் அவர்களின் சிறீலங்கா, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான பயணத்தையடுத்து தன்னையே தீயிட்டுள்ளமை என்பது ஐ.நா தன் பொறுப்பை உணரவும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து சர்வதேசம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவும் வேண்டுமென்ற கருத்தையே தனது உயிர்த்தியாகத்தின் ஊடாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் தாயகத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் மக்கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற செய்தியையும் எமக்கு வலியுறுத்தியுள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் துயரில் பங்கேற்று நிற்பதுடன்,தன்னின விடுதலைக்கெனத் தன்னுயிரை ஈகம் செய்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் “ஈகைப்பேரொளி” என மதிப்பளிக்கின்றது.
முருகதாசன் விட்டுச்சென்ற கோரிக்கைக்கு ஐ.நா நீதி வழங்காத நிலையில் செந்தில்குமரனும் தனது கோரிக்கையையும் முன்வைத்துச் சென்ற இவ்வேளையில், மேலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதற்கான சூழமைவு ஏற்படாதவாறு எமது செயற்பாடுகளை புத்தெழுச்சியுடன் வேகம் கொண்டு முன்னெடுப்போம் என அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியெடுத்து, தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடர்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)