சர்வதேச விசாரணையை கோரும் இந்த யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த யோசனையுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்க உள்ள வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளியிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை சர்வதேச விசாரணையை கோரும் குறித்த யோசனை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பூரண ஆதரவை வழங்குவார் என்றும் ராஜதந்திர வட்டாரங்களின் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கைக்கு எதிராக கடந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனையின் தொடர்ச்சியாக இருந்த யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.