-
21 செப்., 2013
Latest News
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் காரியாலயம் இராணுவ புலனாய்வாளர்களால் சுற்றிவளைப்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமாகிய அறிவகத்தை சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தும் வகையில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.
20 செப்., 2013
கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈபிடிபி மற்றும் இராணுவத்தினர்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்பி கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரும் ஈபிடிபி ஒட்டுக்குழுவும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவது குறித்து உடன் நடவடிக்கை
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய் எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப் பிரச்சினைஐ நா மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான் எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான வீட்டுக்கு புள்ளடி இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்
நன்றியோடு 18.09.2013
ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
தலைமையகம் சுவிட்சர்லாந்து
tthamil 8@gmail .com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அனந்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதன் போது தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
21ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வன்முறையின்றி, சுதந்திரமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தாம் விரும்பியபடி தெரிவு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
(புரட்டாதி சனி நாட்கள் )
சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள் சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால் அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்
சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள்
ஏழரை சனி
கன்னி ராசி (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள் )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )
அட்டமத்து சனி
மீன ராசி (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )
7 ஆம் இடத்து சனி
மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )
4 ஆம் இடத்து சனி
கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்!- அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்!
மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், திணிக்கப்பட்ட தேர்தல் என்ற போதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த் தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்ல வைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/09/ 2013.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/09/ 2013.
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்
அன்பான தமிழ்பேசும் மக்களே!
எம்மினம் தாங்கொணா சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து பாரிய அழுத்தங்களை எம்மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் அண்மையில் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஓர் அழுத்தமே இந்த வடமாகாணசபைத் தேர்தல்.
மாகாணசபை முறைமை ஒருபோதும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட அமையாது என்பதில் தமிழ்த்தேசியத்தில் ஆழமான பற்றுக்கொண்டோர் அனைவரும் தெளிவாகவே உள்ளனர். இருந்தபோதும் எமது மக்கள் விரும்பாத ஒரு தேர்தல் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குமுதவாத ஓர் அரைகுறைத் தீர்வுமுறையான மாகாணசபையைக் கைப்பற்றுவதன்மூலம் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பெரிதாக எதையும் பெற்றுவிடப் போவதில்லை. ஆனாலும் திணிக்கப்பட்ட தேர்தலை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் எமது தமிழினம் உள்ளது.
இத்தேர்தல் முடிவு தமிழரின் உரிமைப் போராட்டத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது என்ற கண்ணோட்டத்தில் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் இருக்கின்றபோது நிலைமை படிப்படியாக மாற்றமடைந்து வருவதை உணர முடிகின்றது. இத்தேர்தல் பெறுபேறுகள் தமக்குச் சாதகமாக வருமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்மக்கள் தூக்கியெறிந்து விட்டார்கள் என்ற பரப்புரையை முடுக்கிவிட அரசு தீவிரமாக முயல்கின்றது. எப்பாடுபட்டாவது தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான சக்திகளைத் தோற்கடித்து தனது பரப்புரையை உலகமட்டத்தில் விரிவாக்குவதற்கு அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கின்றது. அதற்காக முடிந்தவரை முயன்றுகொண்டுள்ளது.
இந்தத் தருணத்தில் தமிழ்மக்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டியது வரலாற்றுக்கடமை. எமது விருப்பமின்றி எம்மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலைச் சரியான முறையில் எதிர்கொண்டு எதிரியின் கபட நோக்கத்தை முறியடிக்க வேண்டிய கடப்பாடு தமிழர் எல்லோருக்குமுள்ளது.
எமது இனம் விரும்பாத வகையில் எம்மீது ஆயுத வன்முறை திணிக்கப்பட்டபோது தவிர்க்க முடியாமலேயே நாமும் ஆயுதமேந்திப் போராடினோம். இன்று சிறிலங்கா அரசானது எம்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு புதியமுறையில் அரசியல் பொறிகளை வைத்து வருகின்றது. இதிலொன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல். இதையும் தேர்தல் வழியிலேயே முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் எமது மக்கள் இருக்கின்றார்கள்.
எனவே, மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், எமது விருப்பின்றி திணிக்கப்பட்ட தேர்தல் என்றபோதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த்தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்லவைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை, மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாயிருந்து தாயகக்கோட்பாட்டில் உறுதியாக நின்று பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பான மக்களே!
“போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் என்றும் மாறாது’ என்ற எமது தேசியத் தலைவரின் எண்ணத்துக்கமைய இன்றைய காலச்சூழலில் எமது அமைப்பானது உலக ஒழுங்கிற்கு ஒத்திசைவான ஒரு போராட்டப் பயணத்தை மேற்கொள்கின்றது. அந்த வகையில் எமது அமைப்பின் அரசியல்துறையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கான பணியை புதிய புறச்சூழலுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லும்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று முழங்கிய தியாகி திலீபனின் நினைவு நாட்களில் நடைபெறும் இந்த மாகாணசபைத் தேர்தல் பொறியை மக்களின் துணையுடன் வென்றெடுப்போம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.அன்புமாறன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி! தமிழர் பிரச்சினை சர்வதேசத்தை நோக்கி வேகமாக செல்லும்: அரசியல் விமர்சகர்கள்
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் எதிகாலம் பற்றிய எதிர்வுகூறலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)