ஒருதலைக் காதலன் சுரேஷின் ஆசிட் வீச்சால் படுகாய மடைந்தார் இன்ஜினியரிங் மாணவி காரைக்கால் வினோதினி.
-
9 அக்., 2013
ஒரு காலத்தில் 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட பி.ஜே.பி. இன்று பிஸியான கட்சியாகிவிட்டது. மோடியின் திருச்சி மீட்டிங்கிற்குப் பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் படுபயங்கர பிஸியான தலைவர்களாகிவிட்டனர். மாநிலம் முழுவதும் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் கட்சி வேலைகள், கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் வேகமாக ஓடிக்கொண்டி ருக்கும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நக்கீரன் என்றதும் ""எங்கள் தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாயை தமிழகத்தில் வலுவாக அறிமுகப்படுத்திய பத்திரிகை அல்லவா'' என்று
புங்குடுதீவில் வெடித்தது பசுமைப் புரட்சி – அணிதிரளும் மாணவர் திரட்சி
கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. தொடர்ச்சியாக இப்பணியை முன்னெடுப்பதன் மூலம் வினைதிறன் மிக்க பொருளாதார வளம் ஒன்றினை உருவாக்கி எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டியது எமது கடமை என்றார் பன்னிரெண்டாம் ஆண்டு பயிலும் தனுஜன்.
எனினும் சில வருடங்களில் புங்குடுதீவை சுற்றியுள்ள கரையோர பிரதேசம் முழுமையும் பனம் கூடலாக ஆக்கப்படும். அதற்காக யுத்த சூழலால் செயல் இழந்து போன சூழகம் (சூழலியல் மேம்பாட்டு அமைவனம்) அமைப்பினை பாடசாலை மட்டத்தில் மீண்டும் உயிரூட்டி இயக்கி எமது இலக்கினை அடையும் செயல்பாட்டில் இறங்கியுள்ளோம். விரைவில் அனைத்து பாடசாலை மாணவர்களையும் சூழகம் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து பனை நடுகை மட்டும் இன்றி பயன் தரு மரங்களையும், நிழல் மரங்களையும் ஊர் முழுவதும் நடுகை செய்யவுள்ளோம் என்று சூழக செயற்பாட்டாளர்களான குகதாஸ், கவியரசன், மோகன், விஜய்ராகுலண் எனப் பலரும் தெரிவித்தனர்.
அது மட்டும் இன்றி , புங்குடுதீவு மகா வித்தியாலய பிரதேசம் பசும் சோலையாய் மாற்றம் பெற இருக்கிறது என்று மாணவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் விதைகளைக் கொண்டு மாபெரும் நாற்று மேடை ஓன்று பள்ளி வளாகத்தினுள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

8 அக்., 2013
தோழர் தியாகுவைக் காவல்துறைக் கட்டாயப்படுத்தி 7வது நாளான இன்று ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு வள்ளுவர் கோட்டம் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றது. அவர் நலமுடன் இருக்கிறார், உணவு மருந்து மறுப்பு என்பதில் பின்வாங்காமல் பட்டினப்போரை மருத்துவமனையில் இருந்தபடியேத் தொடர்கிறார்.
நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்! இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசைப் பங்கேற்கவிடாமல் தடுக்க வேண்டும் எனும் அவரது முக்கியக் கோரிக்கையை மக்களிடன், நண்பர்களிடம், மாணவர்களிடம் எடுத்துச் சென்று அதைத் தமிழகத்தின் ஒருமித்தக் கோரிக்கை ஆக்குவது...
இந்தக் கோரிக்கையை வென்று தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம்...
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் டைரக்டர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா புகார்
‘‘நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார்’’ என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் செய்து இருக்கிறார்.
புகார்
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘நய்யாண்டி.’ இந்த படத்தில், தனுஷ் ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். சற்குணம் டைரக்டு செய்திருக்கிறார். கதிரேசன் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், ‘‘நான் நடிக்க மறுத்த காட்சியில், ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கி இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பேட்டி
இதுபற்றி ‘தினத்தந்தி’ நிருபரிடம் நடிகை நஸ்ரியா கூறியதாவது:–
‘நய்யாண்டி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், கதாநாயகன் என் வயிற்றை தடவுவது போலவும், நான் உணர்ச்சிவசப்படுவது போலவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சற்குணம் என்னிடம் கேட்டார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.படப்பிடிப்பு முடிந்து நான் போன பிறகு எனக்கு தெரியாமல், ஒரு ‘டூப்’ நடிகையை அந்த காட்சியில் நடிக்க வைத்து இருக்கிறார்கள். படத்தின் ‘டிரைலரை’ பார்த்தபோதுதான் இதை கண்டுபிடித்தேன். நான் அணிந்திருந்த அதே சேலையை அந்த ‘டூப்’ நடிகை அணிந்திருக்கிறார். அவர் வயிற்றை கதாநாயகன் தடவுவது போலவும், அந்த ‘டூப்’ நடிகை கையினால் ஒரு ‘மைக்’கை பிடிப்பது போலவும் படுகவர்ச்சியாக அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
மன உளைச்சல்
இதுபற்றி டைரக்டர் சற்குணத்திடம் கேட்டபோது, ‘‘அந்த காட்சியில் நீ நடிக்க மறுத்ததால், டூப் நடிகையை நடிக்க வைத்தேன்’’ என்று கூறினார்.கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் எல்லோரும் பார்க்கிற மாதிரி நாகரீகமாகவே நடித்து வருகிறேன். என்னை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.நான் நடிக்காத ஒரு காட்சியில், என் அனுமதி இல்லாமல், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி நான் நடித்தது போல் காட்டுவது, மிகப்பெரிய மோசடி. என்னையும் ஏமாற்றி, ரசிகர்களையும் ஏமாற்றுவது போல் ஆகும். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
நீக்க வேண்டும்
டிரைலரிலேயே இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்தால், படத்தில் அந்த காட்சி எந்த அளவுக்கு இருக்கும்? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.‘டூப்’ நடிகையை பயன்படுத்தி எடுத்த அந்த படுகவர்ச்சியான காட்சியை படத்தில் இருந்து நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன்.’’இவ்வாறு நஸ்ரியா கூறினார்.
ஆஸி. செல்லவிருந்த 46 பேர் பேருவளை பொலிஸாரால் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாரார் நிலையில் இருந்த 46 பேரை பேருவளை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
7 அக்., 2013
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)