கொமன்வெல்த் மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு – வாக்குறுதி அளித்த பலர் நழுவல் |
சிறிலங்காவில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பித்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பாதிக்கும் குறைந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களே பங்கேற்றுள்ளனர். |
-
16 நவ., 2013
வேடிக்கையான பேச்சாக இருக்கிறது இளவரசர் சார்ள்ஸின் பொறுப்பற்ற பேச்சு. "உலகில் உள்ள பிரச்சினைகளை நினைவுபடுத்திக்கொண்டிருக்க தேவையில்லை எனவும் மாறாக அவற்றுக்கு தீர்வினை பெற பொதுநலவாய அமைப்பு முயற்சிக்க வேண்டும்" எனவும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளமையானது ஆழமற்ற சிந்தனையாகவே தோன்றுகின்றது. நினைவுபடுத்தாமல் எப்படி தீர்வு தேடுவீர்கள் இளவரசரே? தீர்வைப்பற்றி நீங்கள் முன்வைக்கும் போதே எதற்கான தீர்வு என்று சொல்ல வேண்டும் அல்லவா? அத்தோடு உங்கள் மனசாட்சிக்கே தெரிகிறது இங்கே மருந்து தேவைப்படும் காயங்கள் இருக்கின்றன என்று அதனால் தான் தீர்வு பற்றி மேலோட்டமாக சொல்கிறீர்கள்! கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை. வலி சுமந்த மனிதர்களுக்கு தான் தெரியும் வலி என்றால் என்ன என்று...இல்லையேல் நெஞ்சில் துளியாகவேனும் ஈரம் இருக்க வேண்டும்...உங்களுக்கு எங்கே புரியும் எம் இனத்தின் கொடும் துயரம் பற்றி?
http://www.facebook.com/ l.php?u=http%3A%2F%2Fwww.tamilc nn.org%2Farchives%2F217234.htm l&h=TAQEnycAX
இலங்கையில் சனல் 4- ன் இயக்குனர் கல்லாம் மேக்ரோ-வை கொலை செய்ய அரசின் சதி அம்பலம் வீடியோ
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதால் பல்வேறு நாட்டிலிருந்தும் தொலைக்காட்சி சேனல்கள் இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ளன. இதில் முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனல்-4, இலங்கையின் இனவெறி செயல்களை உலகறிய செய்த சேனல். இந்த சேனல் அலைவரிசைக்கு தடைவிதித்தால் மேலும் பெரிய பிரச்சனை எழும் என்பதால் இலங்கை அரசு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
லண்டனில் இருந்து கொண்டே இலங்கைக்கு பெரிய
பொல்லு கொடுத்து அடி வாங்க போகும் இலங்கை ஜனாதிபதி
பொதுநலவாய மாநாடு நடத்தி தன்மீதான குற்றச் சாட்டுகளை மறைக்கலாம் அல்லது மறுக்கலாம் என கனவு கண்ட மஹிந்த பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதை ஆரம்பிகிறது .வந்திருந்த அனைத்து தலைவர்களும் ஊடகங் களும் வடக்கு நோக்கி செல்வதையே முக்கிய நோக்காக கொண்டுள்ளன . அரசோ தனது கட்டுபாட்டை இழந்து தவிக்கிறது இங்கிலாந்து பிரதமர் ஒருவர் 48 வருடங்களின் பின்னர் விஷயம் போன கமரூன் தமிழரின் நலன்புரி நிலையத்தின் சிறிய தகர கொட்டகைகளில் காண பாடும் கா ட்சிகள் அவரின் மனித காருண்யத்தை விளக்குகின்றன தான் எதற்காக போகிறேன் என்று சொன்னவர் செய்து காட் டுகிறார் சிறிய நாட்டின் ஜனாதிபதி மகிந்த பெரியபலமான நாடான இங்கிலாத்தில் இறங்க முடியாத நிலை.பெரிய நாடான இங்கிலாந்தின் பிரதமர் தகர கொட்டகையில் என்ன வித்தியாசம்
பிரி. பிரதமர் வருகையை எதிர்த்து சிங்களவர்கள் சுன்னாகத்தில் போராட்டம்!- மாவிட்டபுரம் போராட்ட மக்களை சந்திக்காமல் பிரதமர் கொழும்பு திரும்பினார்
சுன்னாகம் பகுதியில் சிங்கள மக்களால் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் அந்த நிகழ்வுடன் மீளவும் கொழும்பு திரும்பியுள்ளார்.
சனல்- 4 ஊடகவியலாளர்களையே கண்ணீல் மல்க வைத்தது மக்களின் அழுகுரல்! சர்வதேச விசாரணை தேவையென்கிறார் ரவிகரன்
தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய உறவுகளைத் தொலைத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மாபெரும் குற்றமாகும். இச்சம்பவம் உட்பட தமிழர்கள் மேல் புரியப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் சுயாதீன சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ச
பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம். - ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
15 நவ., 2013
பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் கையொப்பங்கள் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பு |
[ சண்தவராசா ] |
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திச் சேகரிக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் வியாழன் பிற்பகல் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. |
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)