ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாவெட்டப்பட்டநிலையில் கொள்கலனில் வந்த ஒன்பது வாகனங்களை நேற்று சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந் துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி நீளமான கொள் கலன் சந்தேக நபர் முன்னிலையில் திறக்கப்பட்ட போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.