அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
இன்று பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 4-ம் நிலை உள்ள சீன வீராங்கனை லீ நா, 20-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.