24 ஜன., 2014மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி, தனது 400வது போட்டியில் பங்கேற்றார்.
ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது.இதன் காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் பார்சிலோனா, லெவன்டே அணிகள் மோதின.கடந்த 2004ம் ஆண்டு முதல் பார்சிலோனா கிளப் அணியில் இணைந்து விளையாடி வரும் மெஸ்சி,
இதுவரையிலும் 331 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அணிக்காக 400வது போட்டியில் பங்கேற்றார்.
இதன் முதல் பாதியில் லெவன்டே அணியின் நபில்(31) ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் லெவன்டே அணியின் ஜூயன்பார்ன் (53) ‘சேம் சைடு’ கோல் அடித்தார்.
பார்சிலோனா அணி சார்பில், கிறிஸ்டியன் டெலோ ‘ஹாட்ரிக்’ (60,81,86வது நிமிடங்கள்) கோல் அடித்து அசத்தினார்.
முடிவில் பார்சிலோனா அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பார்சிலோனா அணிக்காக 331 கோல்கள் அடித்திருந்த மெஸ்சி 400வது போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார்.