புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
 
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர் பற்றி அதிக அக்கறை உள்ளவர், எனவே எம் தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கட்சிகு
சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக


விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பிரசுரங்களை அச்சிட்டதாக குற்றம் சுமத்தி கணணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவகத்தின் பிரதான வீதி அகலமாக்கப்படுகிறது

யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
jaffna_alaki_1920_2
யாழில் நடைபெற்ற அழகி போட்டி
தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாக
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு 80 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை உயர் அதிகாரிகள் ராஜதந்திரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்க வேண்டுமென 80 கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து கோரியுள்ளன. அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து தமிழ் மஹா சங்கமென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயணத் தடை விதிப்பது குறித்து தமிழ் மஹா சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் -15 தொகுதிகளின் கணிப்பில் திமுக 12 இலும் அதிமுக 2 இலும் தென்சென்னையில் சமநிலையில் இரண்டும் இருபதாக  நக்கீரன் .சரியான கணிப்பா என மே 24 தெரியவரும் நக்கீரனின் திமுக பக்க சார்பு இருக்கிறதா  என்பது புரியும்-மீதி செவ்வாய் வெளிவரும் 
 விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக



‘‘ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது, ஓரவஞ்சனை’’  பிரேமலதா விஜயகாந்த் .
குப்பை நிரம்பிய மதுரை
மதுரை பாராளுமன்றத்தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதாவிஜயகாந்த் நேற்று கீழவாசல் அரசமரத்துப் பிள்ளையார் கோவில் அருகே

சிறந்த நிர்வாகி, குஜராத் மோடியா? தமிழகத்தின் இந்த ‘லேடி’யா? தென் சென்னை பிரசாரத்தில் ஜெயலலிதா விளக்கம்

நாட்டில் சிறந்த நிர்வாகி யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், குஜராத்தை சேர்ந்த மோடியா?, தமிழ்நாட்டை சேர்ந்த இந்த லேடியா? என்று தென்சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.


பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
சூறாவளி பிரசாரம்
புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள்
தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்

 விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: இன்று மாலை 6 மணியுடன் முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறக்கும் வகையில் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்

உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து

சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு

நிதியை இடைநிறுத்தும் தீர்மானத்தை கனடா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்


கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுநலவாய நாடுகளுக்கான நிதி இடைநிறுத்தப்படும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் கனடியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ் பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள்
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் அமைச்சர் விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி 
ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

ad

ad