புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி 
ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதி வருகின்றன.


முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓடங்களை பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக றய்னா 41 பந்துகளுக்கு முகம் கொடுத்து 56 ஓட்டங்களையும் அணித் தலைவர் டோனி 32 ஓட்டங்களையும்  பெற்றுக் கொடுத்தனர்.



- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=743052899622342376#sthash.tgPg2ubJ.dpufடெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். 8-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.


டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மெக்கல்லம்- ஸ்மித் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். கடந்த போட்டியில் கலக்கிய மெக்கல்லம் இந்த போட்டியில் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்மித் 29 ரன்னில் எடுத்த நிலையில் வெளியேறினார்.

சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 41 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் இந்த ஸ்கோரை எடுத்தார். அடுத்து வந்த டு பிளேசிஸ் 24 ரன்னும், டோனி 15 பந்தில் 32 ரன்னும் எடுக்க சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்க 177 ரன் எடுத்துள்ளது.

டெல்லி அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்ததால் டெல்லி அணி வீரர்களால் ரன் குவிக்க இயலவில்லை. குறிப்பாக பந்து ஸ்விங் ஆகியதால் டெல்லி அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 84 ரன்களுக்குள் 9 விக்கெட்டை இழந்து 93 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கவுட்லர் நைல் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. டெல்லி அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 21 ரன்னும், நீசம் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

சென்னை அணி தரப்பில் ஈஸ்வர் பாண்டே, ஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

ad

ad