புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரில் பங்கேற்ற படையினரை நான் பாதுகாப்பேன்.  ஆனால், ஜனாதிபதி மகிந்ததவின் குடும்பத்தினது மனிதஉரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களை அளிப்பேன்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அண்மையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இந்த அரசாங்கத்தின் மனிதஉரிமை மீறல்களுக்கான கடைசி உதாரணம்.
இந்த தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் இராஜ் ரவீந்திர பெர்னான்டோ உள்ளிட்டவர்களைக் கைது செய்ய அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா?
அரசாங்கத்தின் ஊழல் திட்டங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மனிதஉரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன.
இந்த தாக்குதல் ஜெனிவா தீர்மானத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

ad

ad