புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014




‘‘ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது, ஓரவஞ்சனை’’  பிரேமலதா விஜயகாந்த் .
குப்பை நிரம்பிய மதுரை
மதுரை பாராளுமன்றத்தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதாவிஜயகாந்த் நேற்று கீழவாசல் அரசமரத்துப் பிள்ளையார் கோவில் அருகே
வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கீழவாசல், காமராஜர் சாலை பகுதியில் சவுராஷ்டிரா சமுதாய மக்கள் அதிகம் வசிக்கிறீர்கள். உங்களின் நீண்டநாள் கோரிக்கையான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சவுராஷ்டிரா வகுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்.
மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் விரிவுபடுத்தப்படவில்லை. இதனால் மதுரை முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் 2–வது பெரிய நகரம் என்ற பெருமையை பெற்ற மதுரையில் எங்கு பார்த்தாலும் சாக்கடைகளும், குப்பைகளும் நிரம்பி காணப்படுகிறது. மின்வெட்டு, குடிநீர் பிரச்சினையால் தவிக்கிறது மதுரை. வைகை குடிநீர் திட்டம், மணலூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய ஆஸ்பத்திரியில் எந்த வசதியும் இல்லை.
வேதனை ஆட்சி
இதற்கு காரணம் தி.மு.க.–அ.தி.மு.க. தான். அரசு கஜானாவை சுரண்டுவது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். ஜெயலலிதா அ.தி.மு.க. கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒரு சாதனையையும் செய்யவில்லை. அதனால் தான் அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தாவது ஓட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது தமிழகத்தில் நடைபெறுவது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி. நிர்வாகத்திறமை அற்ற ஆட்சி. காசுக்காக ஓட்டுப்போடாதீர். உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் எழுதி வையுங்கள்.
தி.மு.க.–அ.தி.மு.க.வை இந்த தேர்தலில் விடைகொடுத்து வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அப்போது தான் உங்களுக்கு பாவவிமோசனம் கிடைக்கும்.
3 முறையாக ஆட்சி செய்யும் நரேந்திரமோடி, அவரது செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் ஜெயலலிதா ஒரு விருதாவது பெற்றாரா. மாறாக வாய்தா ராணி, அறிக்கை அரசி என 2 பட்டங்களை பெற்றுள்ளார். நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, காய்ச்சல் இருந்தபோதிலும் பிரசாரம் செய்து வருகிறேன் என்றார். அவருக்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் காரணமாகவே காய்ச்சல் வந்துள்ளது.
அழகிரி நீக்கம்
2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஊழல் செய்தவர் ராஜா. அவருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுத்து, தனது பக்கத்திலேயே வைத்துள்ளார் கருணாநிதி. ஸ்பெக்டரம் ஊழலில் 6 மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை தி.மு.க. அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதற்கான காரணத்தை கருணாநிதி வெளியிட வேண்டும். இதற்கு அழகிரி கூறியதுபோல, அவரை மிரட்டியே சிலர் இந்த செயலை செய்ய வைத்துள்ளனர். ஒரு நல்ல தந்தையாக இருப்பவர், தன் குழந்தைகள் அனைவரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். அதைவிட்டு ஓரவஞ்சனை செய்கிறார்
கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது தங்கநாற்கர சாலையை வாஜ்பாய் செயல்படுத்தினார். தற்போது தேசிய நதிகளை மோடி இணைத்து சாதனை படைப்பார். எனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெற்று, தமிழக பிரச்சினைகள் அனைத்தையும் போக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.  முன்னதாக அவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

ad

ad