புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 ஏப்., 2014

வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.தேசிய இனப்பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்க வேண்டும் என்ற ஆர்வம் அரசாங்கத்திற்கு அக்கறை கிடையாது.  இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதனை கால தாமதப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாகவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து தீர்வுத் திட்டம் வழங்குவதனை கால தாமதப்படுத்தி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக் தீர்வு காண வேண்டும் என அரசாங்கம் உண்மையாகவே விரும்பினால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை அமைக்க வேண்டிய அவசியமில்லை.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என கொள்கை ரீதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.