-
11 மே, 2014
சுவிஸ் டென்னிஸ் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சாயிபிரசாந்த் ரவீந்திரன்
சுவிட்சர்லாந்து ஸ்போர்ட்ஸ் சென்டர் சூமாக்கர் சம்மர் 2014 (Sports Center Schumacher Sommer Turnier 2014)சுற்று போட்டி நேற்று (10.05.2014)நடைபெற்ற போது அதில் பங்கு பற்றிய புங்குடுதீவை சேர்ந்த சூரிச் வாழ் தமிழ் இளைஞன் சாயிபிரசாந்த் ரவீந்திரன் ராசமாணிக்கம் இறுதியாட்டம் வரை தகுதி பெற்று இறுதியாட்டத்தில் A .Wisst ஐ 7-6,6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் .சாயிபிரசாந்த் காலிறுதி ஆட்டத்தில் Gerber Michael ஐ W .O முறையிலும் அரையிறுதியாட்டத்தில் M .Kipfer ஐ 6-1,6-2 என்ற இலகுவான வெற்றியிலும் இறுதியாட்டத்தில் A .Wisst 7-6,6-3 என்ற ரீதியிலும் வென்று அசத்தி உள்ளார்.எந்த செட்டையும் எதிரி வெல்ல வாய்ப்பே கொடுக்காதது சிறப்பானது .சுவிஸ் சாயி ரேடர் இராசமாணிக்கம் ரவீந்திரன் தயாளினி தம்பதியின் சிரேஷ்ட புத்திரனாகிய இவரது திறமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
காப்புறுதி பெறுவதற்காகவே கடையை எரித்து நாசவேலை; முள்ளியவளையில் நடந்தது என்கிறது பொலிஸ்
காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகவே முல்லைத்தீவு, முள்ளியவளையில் கடந்த 5ஆம் திகதி பெரும் கடை தீ வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரையும் அங்கு பணி
13 ஐ தாண்டிய தீர்வே தமிழருக்கு வேண்டும்; கூட்டமைப்பிடம் இந்திய அதிகாரிகள் |
இலங்கைத் தமிழ் மக்களின் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாமும் ஒரு போதும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், அதனையும் தாண்டிய தீர்வுத் திட்டமே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்
|
சிறுபான்மையினரால் நாட்டை ஆட்சி செய்ய முடியாதா? சிங்கள மக்கள் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்களா?
"சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்ற நிலை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் எமக்குச் சம உரிமை கிடைக்கும்.
கொக்குவிலில் சிறுவனைக் காணோம்
கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஆறுமுகம் சுதர்சன்(வயது 14) என்ற சிறுவனை காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)