யாழ்
நகரில் மற்றும் 'மாறு தடம்' மாபெரும் வெளியீட்டு விழா... 25.07.2014
வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில்... ஈழத்துக்கலைஞர்களும் சுவிஸ்கலைஞர்களும் இணைந்த பிரமாண்ட தயாரிப்பு. நீண்டகால இடைவெளிக்குப்பின் யாழ்நகரில் வெளியாகும் நம்மவரின் முழுநீள திரைப்படம் (150 நிமிடங்கள் ) இது உங்களின் கதை உறவுகளே! காணத்தவறாதீர்கள். யாழ். ராஜா திரையரங்கம் தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
மன்னார் அஜன் திரையரங்கம் தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி
ஈழத்தமிழனே எழுந்து வா சுவிஸ் பெர்னில் இன்று கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு 23 ஜூலை புதனன்று மாலை 15.00 மணி முதல் 15.00 வரை Helvetiaplatz 4 .Bern (Autobahnத Thun Interlaken எடுத்து Ostring பேரன் வெளியேறி Bern Zentrum நோக்கி வர 7 நிமிட ஓட்டம் )
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
தடுத்து வைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது
சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசின் ஊதுகுழல் -சம்பந்தன்
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித
உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச
விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக
ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க
தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.