கல்விப்பொதுத்தர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 13ஆம் நிலையை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எங்கள் சிற்பனை ஊரின் மைந்தன் ஸ்ரீகுமரன் சாருஜன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதனடிப்படையில் கிளிநொச்சி ஆனந்தநகரைச் சேர்ந்த மதுரநாயகம் அஜித் ஜெரோம் A, 2 B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தன்னம்பிக்கையுடன் செயற்படும் போது மாணவர்கள் வெற்றிபெற முடியும் என கணித பிரிவில் தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் பெற்ற மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.
புங்குடுதீவை சேர்ந்த சிறீல் மகிந்தன் யாழ் சென் யோன்ஸ் கல்லூரி மாணவன் நடந்து முடிந்த கா.பொ.த உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 38ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 684 இடத்தினையும் இம் மாணவனை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
3 ஜன., 2016
நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: வைகோ பதில்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் நாஞ்சில்