![]() ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார். |
-
16 ஜூன், 2024
மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்! [
அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!
![]() இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. |
14 ஜூன், 2024
தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் இருந்து விழுந்து மகள் பலி
![]() தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது |
13 ஜூன், 2024
காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம்!- என்கிறது சஜித் அணி.
![]() யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். |
அடுத்த சில வாரங்களில் 15 முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்!
![]() எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார் |
புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு - முன்னாள் சுங்க அதிகாரி விடுதலை!
![]() விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் |
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - புலனாய்வு அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஆராய விசாரணைக்குழு நியமனம்!
![]() 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார் |
சித்தார்த்தனுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்த ஜேவிபி முடிவு
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் சித்தார்த்தன் எம்.பியின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது |
4 ஜூன், 2024
15 அமைப்புகள், 210 பேரின் சொத்துக்கள், நிதிகளை முடக்கியது அரசாங்கம்!
![]() இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். |
காஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ள காஸா சமாதான திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆதரவினை வெளியிட்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியன தொடர்பில் பைடன் யோசனைத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார்.
மூன்று கட்டங்களாக சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமாதான முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
31 மே, 2024
கட்டலோனியா பிரிவினைவாதிகளுக்கான பொது மன்னிப்பு: ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல்!!
2017 ஆம் ஆண்டு சட்டவிரோதமான மற்றும் தோல்வியுற்ற
மீள நிகழாமையை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட வேண்டும்!
![]() இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என ' போர் தவிர்ப்பு வலயம் ' ஆவணப்படத்தின் இயங்குநர் கல்லம் மக்ரே வலியுறுத்தியுள்ளார். |
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது பதவியை நீடிக்க வேண்டும்! - ஐதேக புது நிபந்தனை.
![]() நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டு முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது தேர்தலை ஒத்திவைத்து இன்னும் சிறிது காலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். |
இலங்கையர்கள் தாய்லாந்தில் விசா இன்றி நுழையலாம்!
![]() இலங்கை உட்பட 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 60 நாட்கள் வரையில் அங்கு தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் |
30 மே, 2024
இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது!
![]() பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது |
கிளிநொச்சியில் ஐஸ் வியாபாரி வீட்டில் பதுங்கியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது!
![]() கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை
28 மே, 2024
சாவகச்சேரியில் விபத்து - 4பேர் காயம்!
![]() யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. |
ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு
![]() ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது |