புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2013

ஆடைத் தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்க அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்து கொண்டிருந்தார். அபாயகரமான நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரை வெளியேற்றுவதற்காக டியூப் ஒன்றை பிறப்புறுப்பில் உட்செலுத்த முயன்றபோது பிறப்புறுப்பிலிருந்து இரத்தம்; வெளியேறிக்கொண்டிருந்தது என்று வைத்தியரான அசேல அதிகாரி சாட்சியமளித்தார்.
ஆடைத் தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு விசாரணை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சாட்சியமளிக்கையிலேயே சமிளா திசாநாயக்கவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியரான அசேல அதிகாரி மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். வைத்தியசாலையில் அன்றையதினம் கடமையாற்றிய தாதி ஒருவரும் மன்றில் நேற்று சாட்சியமளித்தார்.
வைத்தியரான அசேல அதிகாரி அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்த சில நிமிடங்களில் சமிளா திசாநாயக்கவுக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. நானே அவருக்கு சிகிச்சையளித்தேன்.
அவர் அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்தார். அபாயகரமான நிலையில் இருந்த சமிளாவுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது.
சிறுநீரை உடனடியாக வெளியேற்றுவதற்காக சிறுநீரை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டியூப் ஒன்றை அவருடைய பிறப்புறுப்பில் உட்செலுத்த முயன்றபோது பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது என்றார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிளா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தபோது பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் சாட்சியமளிக்கப்பட்டதன் பின்னர் இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், சந்தேக நபரான வைத்தியரை அன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

ad

ad