செவ்வாய், மார்ச் 25, 2014

சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின், புரட்சி படையில் சேர்ந்தார்களா?சென்னையில் படித்த கல்லூரி மாணவர்கள் இருவர், சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இருவர்தான், சிரியா நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் பரபரப்பு தகவல்கள்  வெளியானது.

இது பற்றி, தமிழக உளவுப்பிரிவு மற்றும் தீவிரவாதிகள் கண்காணிப்பு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு அதுபோன்ற தகவல் எதுவும் வரவில்லை என்றும், மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் அதுபோன்ற தகவலை எங்களுக்கு அனுப்பவில்லை என்றும், இதனால் அதுபற்றி நாங்கள் விசாரணை எதுவும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தனர்.