புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014


பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா?-மக்கள் மத்தியில் சந்தேகம்
news

பரந்தன் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


கடந்த 14ஆம் திகதி பரந்தன் ஸ்ரார் உணவகத்திற்கு பின்னால் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கிளிநொச்சிப் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மரணம் புகையிரதத்தில் சென்று கொண்டிருக்கும் போது தவறிவிழுந்திருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டு வருவதாக முன்னர் செய்திகள்  வெளியாகியிருந்தன.

எனினும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டுக் காயங்கள் இருப்பதனால் குறித்த மரணம் கொலையாக இருக்கலாம் என தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் உடற்கூற்று பரிசோதனை செய்வதற்கு நீதிமன்று உத்தரவிடவில்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இராணுவத்தினரால் தேடப்பட்டு வருகின்ற கோபி என்பவருடைய முகச்சாயலை ஒத்ததாக குறித்த சடலம் காணப்படுவதால் ஊர் மக்கள் குறித்த சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கோபியினுடைய தயார் நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் வைத்து ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad