| கிரிக்கட் உலகை அதிர வைத்த மும்பையின்  அதிரடி அற்புதம் .இலவு காத்த கிளியாக  இருந்த ராஜஸ்தான்  வெளியேற்றம் ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது
 .
 
 
இன்றைய ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரொயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 
இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தன. 
சம்சன் அதிரடியாக விளையாடி 74 ஓட்டங்களும், நாயர் 50 ஓட்டங்களும் எடுத்தனர். இதனை அடுத்து  190 என்ற இலக்கை எட்டினால் அரையிறுதி வாய்பை தொடலாம் என்ற குறிக்கோளுடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. |