புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

வெளியே வந்தார் ஜெ. ; போயஸ் தோட்டத்திலிருந்து... பெரியார் சிலை வரையிலான நிகழ்வுகளின் முழு தொகுப்பு!




சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர்  போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயல
லிதா, ஆளுநரை சந்தித்து, தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார்.
பிற்பகல் 1.28  ஆளுநர் மாளிகையை நோக்கி...
சென்னை போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் சரியாக 1.28 மணிக்கு ஜெயலலிதா காரில் ஆளுநரை பார்க்க சென்றார்.
பிற்பகல் 1.54விநாயகர் கோவில் முன் வழிபாடு
ஜெயலலிதாவின் வாகனத்தை தொடர்ந்து சுமார் 20 வாகனங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில் அருகே 1.54 மணி அளவில் ஜெயலலிதாவின் கார் கடந்தபோது, மெதுவாக சென்றது. அப்போது காரில் இருந்தபடியே விநாயகரை வழிபட்டார் ஜெயலலிதா.
பிற்பகல் 2.05: ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் பிற்பகல் 2..02 மணி அளவில் ஜெயலலிதாவின் வாகனம் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது. 2.05 ,மணி அளவில் அளுநர் ரோசய்யாவை சந்தித்தார்.  அப்போது பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு, அவர் தன்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதம் மற்றும் தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார். 


பிற்பகல் 2.34: ஆளுநர் மாளிகையில் இருந்து ஜெ. புறப்பட்டார்

பிற்பகல் 2.34 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஜெயலலிதா காரில் புறப்பட்டார்.  அரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிற்பகல் 3 மணி; எம்.ஜி. ஆர் சிலைக்கு மரியாதை
ஆளுநருடனான சந்திப்பை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா,   பிற்பகல் 3 மணி அளவில் அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாஸா சிக்னல் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை  செலுத்தினார்.
பிற்பகல் 3. 05: அண்ணா சிலைக்கு மரியாதை
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா, பிற்பகல் 3.05 மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிற்பகல் 3.17: பெரியார் சிலைக்கு மரியாதை
அதனைத் தொடர்ந்து 3.15 மணி அளவில் ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு வந்து சேர்ந்த ஜெயலலிதா,  பெரியா சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. இந்த நிகழ்வுகளை முடித்த பிறகு, அவர் தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
கட்சியினர் உற்சாக வரவேற்பு
முன்னதாக 7 மாதங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஜெயலலிதாவை, அவரது இல்லம் முன்பாக திரண்டிருந்த அதிமுகவினர் ஏராளமானோர் பூரண கும்ப மரியாதையுடனும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்கவும், ஆடிப்பாடியும், மலர் தூவியும், ஜெயலலிதாவை வாழ்த்தியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வழிநெடுகிலும் ஜெயலலிதாவுக்கு கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 7 மணி: ஜெயலலிதா முதல்வராக தேர்வு
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா மற்றும் 3 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி விடுவித்தது. இதையடுத்து, முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (22 ஆம் தேதி) காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 10 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டார்கள்.
காலை 7.30 மணி; ஜெயலலிதாவுடன் பன்னீர் ஆலோசனை...

இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

காலை 8 மணி: பன்னீர் செல்வம் ராஜினாமா...

அதன்பின், கடந்த 7 மாதங்களாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு...
பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவை பட்டியலை அளிக்குமாறும் கவர்னர் கேட்டுக்கொண்டார்.

ad

ad