புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

சென்னை வீரர்களுடன் இரவு முழுக்க ஓட்டல் அறையில் தங்கிய இளம் பெண், பிரித்தி ஜிந்தா விருந்து- ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

















தற்போது நடைபெற்று வரும் 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறு்ப்பான கட்டத்தை எட்டியுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013ம் ஆண்டு பெரும் முறைகேடுகள் நடந்தன. வீரர்கள் பலரும் சூதாட்ட புக்கிகளிடம் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி நீக்கம்
செய்யப்பட்டு, தடை செய்யப்பட்டனர் பல வீரர்கள், அதில் முக்கியமானவர் ஸ்ரீசாந்த். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு அடுத்த ஐபிஎல் சீசனான 2014லும் பல முறைகேடுகள் நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.  கடந்த ஐபிஎல் 7 போட்டியின் போது நடந்த சில விவரங்கள் பிசிசிஐ ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு (ACSU)   ஸ்கேனரில்  சிக்கி உள்ளன.

இந்த விவரங்கள் குறித்து  ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு  தலைவர் ரவி சவானி பிசிசிஐக்கு இமெயில் அனுப்பி உள்ளார்.அதில் வீரர்கள் விதிகளை மீறியசெய்ல்பாடுகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு விதிகளை யார் யார் எப்படி எல்லாம் மீறி உள்ளார்கள் என பட்டியலிட்டு உள்ளார்.   இந்த விவரங்கள் அனைத்தும் ஐபிஎல் சீசன் 7 -ல் ஏப்ரல் 16 முதல் ஜூன் 1 ந்தேதிவரை நடைபெற்றவையாகும்.அப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஐபி எல் சூதாட்ட வழக்கு நடந்து வந்தது குறிப்பிட தக்கது.

அந்த இமெயிலில் உள்ள சுருக்கமான விவரங்கள்  வருமாறு:-

ஏப்ரல் 30 2014 :   பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா  அணியில் உள்ள அனைவருக்கும் விருந்து அளித்தார். இந்த விருந்து  மும்பை கடற்கரையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கப்பலில் நடைபெற்றது. அந்த கப்பல் உரிமையாளரால் இலவசமாக  வழங்கபட்டது. அதில் வெளி ஆட்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது  ஆனால் பிரீத்தி ஜிந்தாவின் தனிப்பட்ட நண்பர் ஒருவர் உடன் இருந்தார்.  வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனற கவலை காரணமாக இது தொடர்பாக உரிமையாளரிடம் பிசிசிஐ ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு  விசாரணை நடத்தியது.

மே 8 2014:  ஷாருகானின் நண்பர் மற்றும்  வணிக கூட்டாளி  ஒருவர் கொல்கத்தா நைட் ரைடர் அணி வீரர்களுக்கு விருந்து அளித்தார். ஷாருகான் உள்பட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 9 2014:  டெல்லியில் ஓட்டல் ஏ எம் மேர்ரியாட் ஏரோசிட்டி ஓட்டலில் டேர் டெவ்ல் அணி நடத்திய விருந்திற்கு வெளியில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த வீரர்கள் மற்றும்  அதிகாரிகள் வந்திருந்த வெளி விருந்தினருடன் கலந்து பழகினர். பின்னர் இது குறித்த பட்டியலை பிசிசிஐ ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவிடம் வழங்கப்பட்டது.

மே 9 2014 :  மும்பையில் ஐடிசி கிராண்ட் மவுரியா  ஓட்டலில் தங்கி இருந்த போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர் ஒருவரின் அறைக்குள் இளம் பெண் ஒருவர் சென்றார். அந்த பெண் வீரரின் அறைக்கு இரவு 11.50 க்கு சென்றார்.  பிறகு மறுநாள் காலை 6.05 க்கு திரும்பினார்.இது குறித்து அப்போது கேள்வி கேட்கபட்டது.அந்த வீரர் ஒரு  நல்ல நண்பர் என்று தெரிவித்தார்.

மே 9 2014 மற்றொரு  இளம் பெண் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அறைகுள் நுழைந்தார் இரவு 10:10க்கு அறைக்குள் நுழைந்த வர மறூநாள் காலை 7 30 க்க்கு  வெளியில் வந்தார் இது குறித்து விசாரணை நடத்தபட்ட போது வீரர்  அவர் தனது நெருங்கிய நண்பர் எனவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறினார்.  தொடர்ந்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு  விசாரணையில் அதே பெண் வீரர் ஸ்ரீசாந்துடன் தொடர்பு வைத்து இருந்தது.  மேலும் பல ஐபிஎல் அணிகளில் உள்ள மூத்த வீரர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.அவரிடம் 2013 க்குரிய ஆன பச்சை அனுமதி அட்டை இருந்தது.

 * ஐதராபாத்  சன் ரைசர்ஸ் அணியின் வீரர்களின் அறைக்கு அதிக அளவு வெள விருந்தினர் வந்து சென்று வந்து உள்ளனர்.

 *  கிங்ஸ் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர் தனது அறையில் ஆண் நண்பர் ஒருவரை தங்க வைத்து உள்ளார். அவர்  போட்டி நடைபெறும் இடத்திற்கு வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தும் உள்ளார்.

அது போன வருஷம் இதுகுறித்து சிஎஸ்கே மற்றும் கேகேஆர் தரப்பில் பதில் வரவில்லை என்றபோதிலும், பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற பிற அணிகளின் தரப்பில் பேசியவர்கள், தாங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டோம் என்றும், போன வருட கதை அதோடு முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர். 

ad

ad